ஆசிய விளையாட்டு போட்டி.. வெறும் 45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..
ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதியில், இந்திய அணி இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 80* ரன்கள் குவித்தார். தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே திணறடித்தனர்.
பும்ரா, அக்சர் படேல், மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினர். மேலும் 3 ரன் அவுட்களைச் செய்து ஃபீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் மிரட்டினர். இதனால் இலங்கை அணி 9.5 ஓவர்களில் வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 6 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். நுவனிது பெர்னாண்டோ மட்டுமே அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார்.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய ஆடவர் அணி, தங்கப் பதக்கத்திற்கான பலப்பரீட்சையில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மகளிர் அணியைத் தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


