பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி திடீர் மரணம்!. ரசிகர்கள் ஷாக்..
உலக அளவில் WWF, WWE போன்ற மல்யுத்த போட்டிகளுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில், விளையாடிய பலரும் பின்னாளில் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களாக மாறியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி(40) திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவரை ரசிகர்கள் பெக் (Pac) என பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தனர்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்ற பெஞ்சைன் அந்த போட்டிக்குபின் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விபரம் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


