2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.. அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு..

 

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை, கேப் டவுன் நகரில் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வு உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டே உள்ளதற்கான அதிகாரப்பூர்வ தொடக்கத்தை குறிப்பதாக இருக்கும்.

 

முந்தைய தகவல்களின்படி, 2027 ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி, நவம்பர் 21, 2027 அன்று இறுதிப்போட்டியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஐசிசி ஒருநாள் தரவரிசையின் அடிப்படையில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

 

மீதமுள்ள 4 இடங்களுக்குத் தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் அணிகள் தேர்வாகும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயுடன் இணைந்து இத்தொடரை நடத்தும் நமீபியா அணி, இன்னும் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்யவில்லை.

 

மேலும், போட்டிகளுக்கான டிக்கெட் பதிவு தொடர்பான தகவல்களையும் ஐசிசி வியாழக்கிழமை வெளியிடுகிறது. ரசிகர்களுக்கான டிக்கெட் பதிவுகள் அன்று தொடங்கினாலும், உடனடியாக டிக்கெட்டுகளை வாங்க முடியாது. இத்தொடர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்பாக மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.