சூர்யவன்ஷி இந்திய அணியில் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்..!- கவுதம் கம்பீர்
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று (செப்.18) நிறைவடைந்தது.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு கவுதம் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், " சூர்யவன்ஷி இந்திய அணியில் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். அவரிடம் இருக்கும் திறமை, அவரால் என்ன செய்ய முடியும் என்று நமக்கு தெரியும்.
ஆனால் பல ஆண்டுகளாக அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஒருவருக்கு புதிதாக அணிக்குள் வந்த ஒருவரை விட எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயமாக அது நீண்டகால வாய்ப்பாக இருக்கும்" என்று கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


