மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு; விழாக் கோலம் பூண்ட மதுரை!

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக 4.5 டன் வண்ண மலர்களால் மலர் மாலைகள் தயாரிக்கப்பட்ட நிலையில் நேற்று  கோவிலில் உள்ள 12 கோபுரங்களிலும் சாற்றப்பட்டுள்ளது. 

ஐஸ்வர்ய சாமந்தி, புஸ்கின் வெள்ளை, சாக்லேட் சாமந்தி, விரிச்சி பூ , ப்ளூ ஆஸ்திரேலியா, ரெட் ஆஸ்திரேலியா, பெங்களூர், ஓசூர், திருச்சி, நிலக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த மலர்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி மும்முறமாக கிழக்கு கோபுரம் எதிரே உள்ள புது மண்டப பகுதியில் நடந்தது.

திருக்கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். கடைசியாக 08.04.2009 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுக்கும் மராமத்துப் பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது 17 வருடங்கள் கழித்து மீனாட்சியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கான குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.

இன்று முதல் 20.09.2026 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வரிசைகளிலும் கட்டணமில்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்கள் காண்பதற்கு வசதியாக ஐந்து கோபுரங்களிலும் நுழைவு வாயில்கள் மூலம் 7 நுழைவுப் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு, 9,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருக்குடமுழுக்கைக் காண 80,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ரூ.5 கோடி மதிப்பிலான விபத்துக் குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மோர் பாக்கெட் அடங்கிய பிரசாதப் பை வழங்க ஏற்பாடு.

ஆடி வீதிகளில் 11 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

திருக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் 25 மருத்துவ உதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. முக்கிய இடங்களில் பக்தர்கள் திருக்குடமுழுக்கைக் காண 51 LED வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. FRS உட்பட 448 கேமராக்கள் மூலம்  கண்காணிக்க பட்டு வருகின்றனர். 

அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்காக 50 SIM Card Based Walkie-Talkie பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருக்குடமுழுக்குச் சிறப்புப் பணிக்காக 100 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகம், ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில் ஸ்பிரிங்க்ளர் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள், NSS மற்றும் NCC மாணவர்கள் 600 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.