ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

 

 

 

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா கூறுகையில், இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் சரி, எந்தவொரு அணியையும் நாங்கள் ஒருபோதும் லேசாக எடுத்து கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார். 

 

இரண்டாவது அரையிறுதி போட்டியின் முடிவை பொறுத்தே யாருடன் இறுதிப்போட்டி என்பது உறுதியாகும் என்றும், இலங்கை அல்லது பாகிஸ்தான் என எந்த அணியை எதிர்கொண்டாலும் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பேசிய அவர், தமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அணிக்காக பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகவும், அது தனது சுய நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

 

இதனிடையே, இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, செப்டம்பர் 13 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தயாராகி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.