2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? இம்பாக்ட் பிளேயராக மட்டும் களமிறங்குவாரா?
ஐபிஎல் போட்டிகளில் மகேந்திர சிங் தோனியை மீண்டும் களத்தில் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 45 வயதாகும் தோனி, 2026 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. காயம் மற்றும் உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக அவர் களத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
2026 சீசனுக்கு முன்பு சிஎஸ்கே அணி தோனியை ‘அன்கேப்டு’ வீரராக ரூ.4 கோடிக்கு தக்க வைத்திருந்தது. ஆனால், 2027 சீசனில் அவர் விளையாடுவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேநேரத்தில், ‘இம்பாக்ட் பிளேயர்’ ஆக மட்டும் தொடர்ந்து விளையாட தோனி விரும்பவில்லை என அவரது முன்னாள் சிஎஸ்கே சக வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
தோனி தொடர்ந்து விளையாடினால் முழுநேர விக்கெட் கீப்பராகவே இருக்க விரும்புகிறார். ஆனால், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டால் இம்பாக்ட் பிளேயர் முறையில் விளையாடுவது சிஎஸ்கே அணிக்கும் தோனிக்கும் சாதகமாக இருக்கும் என பத்ரிநாத் கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 5,439 ரன்கள் குவித்துள்ளார். ஐந்து முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான தோனியின் அடுத்த முடிவுக்காக ரசிகர்களும் சிஎஸ்கே அணியும் காத்திருக்கின்றனர். தோனி மீண்டும் களமிறங்குவாரா என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


