டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..
டுலீப் டிராபியில் தனது அறிமுக போட்டியில் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இன்று நடைபெற்ற நார்த் ஈஸ்ட் சோன் அணிக்கு எதிரான போட்டியில், ஈஸ்ட் சோன் அணிக்காக களமிறங்கிய அவர் 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி இரண்டு பவுண்டரிகளை விளாசிய நிலையில், விரைவாக தனது விக்கெட்டை இழந்தார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யவன்ஷி, சிவப்பு பந்தில் இன்னும் தனது திறமையை முழுமையாக நிரூபிக்க வேண்டியுள்ளது. பீகார் அணிக்காக 8 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 17 என்ற சராசரியை மட்டுமே பெற்றுள்ளார்.
இருப்பினும், 15 வயதிலேயே நீண்ட வடிவ கிரிக்கெட்டில் சில தோல்விகளை சந்திப்பது கவலைப்பட வேண்டிய விஷயம் அல்ல என அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா தெரிவித்துள்ளார். வெற்றி, தோல்வி இரண்டுமே ஒரு வீரரின் வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட வடிவ போட்டிகளில் பொறுமையுடன் விளையாடுவது அவசியம். எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை சூர்யவன்ஷி படிப்படியாக கற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பந்தும், போட்டியும், தோல்வியும் அவருக்கு ஒரு பாடமாக அமையும்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


