சேலம்: காவடி பழநியாண்டவர் கோயிலில் சக்திவிகடன் நடத்தும் திருமண வரம்தரும் ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோமம்!

இருமணம் இணையும் திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். காரணம் இல்லறத்தில் ஈடுபடுபவர்களே சகல அறங்களையும் செய்யத் தகுதியானவர்கள் என்கின்றன ஞான நூல்கள்.

அப்படிப்பட்ட திருமணம் சில நேரங்களில் கிரக தோஷங்களால் தள்ளிப்போகின்றன. ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் ஏழாம் இடம் சரியாக அமையவில்லை என்றால் தாமதத் திருமணம், திருமண வாழ்வில் சிக்கல்கள் ஆகியன உண்டாகும் என்கிறார்கள்.

அப்படிப்பட்ட தோஷங்களை நீக்கி நல்ல வாழ்க்கைத் துணை அமைய உதவும் வழிபாடு ஒன்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார். அதுதான் சுயம்வர பார்வதி ஹோமம்.

எனவேதான் சக்திவிகடன் வாசகர்களின் நலனை உத்தேசித்து சேலம் காவடி பழநியாண்டவர் ஆசிரம் ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் ஒன்றைச் செய்ய உத்தேசித்துள்ளது. அற்புதமான அந்த ஹோமம் குறித்து அறிந்துகொள்வதற்கு முன்பாக அது நடைபெறும் காவடி பழநியாண்டவர் ஆசிரமக் கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.

சுயம்வர பார்வதி ஹோமம்

சேலத்தில் குறைகள் தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகளைப் போக்கும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது முருகனின் ஒன்பதாம் படை வீடு என்று போற்றப்படும் ஸ்ரீகாவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலயம். இந்த ஆசிரம வளாகம் பல நூறு தெய்வங்களின் சந்நிதிகளைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இங்கு 108 வெவ்வேறு மகாலட்சுமியின் திருவடிவங்களைக் கொண்டு செல்வவளம் அருளும் திருத்தலமாகவும் இருந்து வருகிறது.

சகல தெய்வங்களின் அருள் மட்டுமின்றி எண்ணற்ற சித்தர்கள்; யோகிகள் அருள் சாந்நித்யமும் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். அருள்மிகு செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் ஆசியால் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம், சகல தெய்வ சந்நிதிகளையும் கொண்டு, நாள்தோறும் சிறப்பு ஆராதனைகளும் ஹோம வைபவங்களும் நடைபெற சிறப்புடன் விளங்கி வருகின்றது.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

ஸ்ரீதீர்த்த பிள்ளையார் தொடங்கி ஷீர்டி சாயிபகவான் வரை இங்கு சகல தெய்வங்களின் திருச்சந்நிதிகளும் உள்ளன. அதிலும் வள்ளி, தெய்வயானை சமேத ஸ்ரீகாவடி பழநியாண்டவர், ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஹயக்ரீவர் சந்நிதிகள் இங்கு மிக மிக விசேஷம் எனலாம்.

இறையருள் பெற்ற சித்தர் செங்கோட கவுண்டர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தச் சித்தபீடம் மிகவும் விசேஷமான திருத்தலம். இத்தகைய மகிம நிறைந்த தலத்தில்தான் சுயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்பட இருக்கிறது.

திருமணத் தடை நீங்கவும், எந்த விதச் சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்- பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது.

இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஹோமத்தில், ‘அழகான துணை கிடைக்க வேண்டும்!’ என்கிற பொருளில் அமைந்த மந்திரங்களைச் சொல்வார்கள்.

‘உலகத்தில் உள்ள சகலவிதமான அசையும்- அசையாப் பொருட்களின் சரீரத்தையும், மனதையும் என்னிடம் ஆகர்ஷணம் செய்வாயாக!’ என்றே வேண்டுகின்றன.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரின் தவத்தின்போது பல தடங்கல்கள் தோன்றின. ஆனால் அவை அனைத்தையும் விலக்கி, அன்னை பார்வதிதேவிக்கு பரமேஸ்வரர் பதியாகக் கிடைத்ததைப் போன்று இனிய துணையைக் கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம்.

சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதற்கான தியான மந்திரங்கள் நல்ல வாழ்க்கைத் துணையையும் சகலசெளபாக்கியங்களையும் தருமாறும், விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும்படியும் வேண்டுகின்றன.

திருமணம் ஆக வேண்டியவர்கள் மட்டுமன்றி, திருமணமாகிக் கருத்து வேறுபாடுகளாலோ வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழும் கணவன்-மனைவிகூட இந்த ஹோமத்தைச் செய்யலாம்.

வாராஹி ஹோமம்
ஹோமம்

காலசர்ப்ப தோஷம், களத்திரதோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்பதோஷம் இருப்பவர்கள் இந்தச் சுயம்வர பார்வதி ஹோமத்தைச் செய்து தோஷங்களில் இருந்து விடுபடலாம். அதிலும் தெய்வச் சாந்நித்தியம் நிறைந்த தலங்களில் - கோயில்களில் நடைபெறும் சுயம்வர பார்வதிஹோமத்தில் கலந்து கொண்டு வழிபடுவது கூடுதல் விசேஷம்.

தனிப்பட்ட முறையில் இந்த ஹோமத்தைச் செய்வது பெரும் பொருட்செலவு பிடிக்கும். ஆனால் கூட்டாக இறைவன் சந்நிதியில் சேர்ந்து செய்வது மிகவும் விசேஷம்.

அதற்காகத்தான் சேலம்- காவடி பழனியாண்டவர் ஆசிரமம் கோயிலில் ஶ்ரீசுயம்வர பார்வதி நடத்த சக்திவிகடனும் லலிதா ஜுவல்லரியும் இணைந்து இந்த ஹோமத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். மேலும் இந்த வைபவத்தில் விவி நேஷனல் நிறுவனமும் தமிழ் மேட்ரிமோனி நிறுவனமும் இணைந்து வழங்குகிறார்கள்.

இந்த ஹோமம் 21.7.2026 அன்று, அம்பாளுக்கு உகந்த ஆடி மாதம் வளர்பிறை அஷ்டமியும் செவ்வாய்க்கிழமையும் இணைந்த சுபநாளில் சக்தி மிகுந்த சுயம்வர பார்வதிஹோமம் நடைபெறவுள்ளது.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.