29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...
இலங்கை ஏ அணியுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று தம்புள்ளையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்தியா ஏ அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 10 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 94 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்தியா ஏ அணியின் ரன் வேகம் குறையவில்லை.
தற்போது களத்தில் கேப்டன் திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி வருகின்றனர். 14.4 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் அபாரமான ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இலங்கை ஏ அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கப் போராடி வருகின்றனர். கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களத்தில் மிரட்டி வருகின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


