Con City: நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடல; அதான் கரண்ட் ப்யூஸை எடுத்தேன்னு... - விடிவி கணேஷ்
அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் கான் சிட்டி திரைப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய விடிவி கணேஷ், "நான் கதை கேட்கும்போதே முதல்ல கேக்குற கேள்வி, யார் புரொடியூசர்? என்பதுதான். ஏன்னா, இன்னைக்கு தேதில யார் வேணா படம் ஆரம்பிச்சிடலாம்.
ஆனா, அதை தியேட்டர் வரைக்கும் கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். யார் புரொடியூசர்?னு கேட்டா, நானேதான் சார்னாரு இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
சரி, ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட் சொல்லுப்பான்னேன். யோகி பாபு, அர்ஜுன் தாஸ், அருள்தாஸ்னு பெரிய பட்டாளமே சொன்னாரு. எனக்கும் அர்ஜுன் தாஸுக்கும் இருக்குற காம்பினேஷன் சீன்லயே டெய்லி 100-லிருந்து 150 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேணும்.
இதையெல்லாம் இயக்குநர் செய்வாரான்னு யோசிச்சேன். ஆனா, கேட்ட சம்பளத்துக்கு ஓகே சொல்லிட்டு, கேட்ட அட்வான்ஸையும் டேபிள்ல வச்சிட்டாரு. கான் சிட்டி அப்படின்னா ஒரு மோசமான சிட்டி. அதுக்குள்ள என்ன நடக்குதுன்றதுதான் கதை.

இதுல நான் ஒரு எலக்ட்ரிசிட்டி போர்டு ஆபீசரா வர்றேன். போன வாரம்தான் ஒரு நியூஸ் பார்த்தேன். எவனோ ஒருத்தன் கரண்ட் பிளக்கைப் பிடுங்கிடுவானாம்.
போலீஸ் அவனைப் பிடிச்சு விசாரிச்சப்போ, நான் சொன்ன கட்சிக்கு இவங்க ஓட்டு போடல, அப்புறம் எப்படி இவங்க ஜாலியா தூங்கலாம்?னு சொல்லியிருக்கான். இப்படியான சம்பவங்களை வச்சுதான் இந்தப் படத்தை இயக்குநர் எடுத்திருக்கார்.
இந்த நேரத்துல எனக்கு இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. என் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கேமராமேன் மனோஜ் பரமஹம்சாவை எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரித் தலைவரா நியமிச்சிருக்காங்க. முதலமைச்சருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சரியான ஆளுமைக்கு சரியான பதவி கொடுத்திருக்காங்க" எனக் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


