ரவி மோகன் வீட்டில் திருட்டு: `ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்; 40,000 பணம் - மேலாளர் புகார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகனின் நீலாங்கரை இல்லத்தில், வைர நெக்லஸ் மற்றும் பணம் திருடு போனதாக அவரது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதற்கட்டமாக ரூ.3 லட்சம் திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புகார் விவரம் மூலம் திருடுபோன பொருளின் மதிப்பு வெளியாகியுள்ளன.

ரவி மோகன்

நடந்தது என்ன?

நடிகர் ரவி மோகன் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கோகுல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, நடிகர் ரவி மோகன் தனது அறையிலிருந்து பணத்தை எடுத்து வருமாறு மேலாளர் கோகுலிடம் கூறியுள்ளார்.

அவர் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் திறந்த நிலையில் கிடந்ததும், அதிலிருந்த பணமும், நகையும் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கோகுல் உடனடியாக இதுகுறித்து ரவி மோகனிடம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் சிக்கியது எப்படி?

பணம் காணாமல் போனதால் சந்தேகமடைந்த நடிகர் ரவி மோகன், வீட்டில் பணிபுரியும் அலமேலு மற்றும் அவரது மகன் வசந்த் ஆகியோரிடம் தன்னிச்சையாக விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் போது, வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் சேர்ந்தே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அலமேலு ஒப்புக்கொண்டுள்ளார்.

ரவி மோகன்
ரவி மோகன்

இதனடிப்படையில், திருட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜேஷ் (ஓட்டுநர்), சதீஷ் (தனிப்பட்ட உதவியாளர், அலமேலு (வீட்டு வேலைக்காரர்), ராஜேஷ் (தனிப்பட்ட ஓட்டுநர்), வசந்த் (அலமேலுவின் மகன்) உள்ளிட்ட ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் 3 லட்சம் பணம் திருட்டுபோனதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் 40,000 ரொக்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸும் காணாமல் போயிருப்பதாகவே ரவி மோகனின் மேலாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.