மகேஷ் பாபுவின் அடுத்த படம் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 28-ஆவது திரைப்படம், 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

தெலுங்கில் ஃபீல்குட் திரைப்படங்களை இயக்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை அறுவடை செய்வதில் வல்லவரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் 3-ஆவது முறையாக இணைந்துள்ளார் மகேஷ் பாபு.

image

திரிவிக்ரமும் மகேஷ் பாபுவும் ஏற்கெனவே கரம் கோத்த அத்தடு, கலேஜா ஆகிய திரைப்படங்கள், பாக்ஸ்ஆபீஸை அடித்து நொறுக்கி புதிய சாதனைகளைப் படைத்தன. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் புதிய திரைப்படத்துக்குத் தமன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியன்று வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.