என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் வெளி​யானது.

தொடர்ந்து திரைப்​படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வரு​ம் டாப்ஸி தனது இன்ஸ்​டாகி​ராம் ஸ்டோரி​யில், ஃபிட்​டான புகைப்​படங்களைப் போடுவதற்காக தயவுசெய்து உங்​களை நீங்​களே வருத்திக் கொள்​ளாதீர்கள் என்று பெண்​களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

டாப்ஸி

இது குறித்து நடிகை டாப்ஸி “ என்னுடைய அடி வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க வரம்பிற்கும் மீறி உடற்பயிற்சி செய்து என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன்.

ஏனெனில் நான் தட்டை (Flat) ஆன உடலமைப்பு கொண்டவளாகவே வளர்ந்ததால், அப்படி இருப்பதே அழகு என நினைத்தேன். ஆனால் அது தவறானது என்பதை தற்போது உணர்ந்துள்ளேன்.

ஒரு பெண்​ணின் உடல் பல ஹார்​மோன் மாற்​றங்​களைக் கடந்து செல்​வ​தால், தின​மும் வயிறு, ஒரே மாதிரி தட்டையாக (Flat) இருக்க வேண்​டும் என்று எதிர்​பார்க்​கக் கூடாது.

நான் இதை தாமத​மாகப் புரிந்து கொண்​டேன். என்​னுடைய ஊட்​டச்சத்து நிபுணர்கள்​தான் எனக்கு இதை விளக்​கி​னார்கள்.

டாப்ஸி
டாப்ஸி

பெண்​களின் அடி வ​யிற்​றுப் பகு​தி​யில்தான் இனப்​பெருக்க உறுப்பு​கள் உள்ளன. அவற்​றைப் பாது​காக்க அந்​தப் பகு​தி​யில் சிறிதளவு கொழுப்பு இருப்​பது மிக​வும் அவசி​யம்.

எனவே, இன்ஸ்டாகி​ராமில் ஃபிட்​டான புகைப்​படங்​களைப் போடுவதற்காக தயவு செய்து உங்​களை நீங்​களே வருத்திக் கொள்​ளாதீர்​கள்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.