`ரொம்ப அடாவடி பண்ணினாங்க- அனு; அக்ரிமென்ட்ல தெளிவா இருக்கு - விஜய் ரெசார்ட் வெப்சீரிஸ் பஞ்சாயத்து

யூ டியூபர் எருமசாணி விஜய் எழுதி நடிக்க ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ரெசார்ட் வெப் சீரிஸில் லீட் ரோலில் நடிக்க கமிட் செய்து விட்டு ஷூட்டிங்கிற்கே அழைக்கவில்லை என கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுகிரஹா வீடியோ வெளியிட்டிருந்த விவகாரத்தில் விஜய்யின் மனைவி தற்போது பதில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அனுகிரஹா

அனுகிரஹாவிடம் நாம் பேசிய போது,

கேரளாவுல கோழிக்கோடு பக்கம் ஒரு கிராமத்துல இருக்கிற எனக்கு இந்த வெப்சீரிஸ் பத்தி எப்படிங்க தெரியும்? என்னுடைய ஒரு குறும்படத்தைப் பார்த்துட்டு விஜய் சைடுல இருந்துதான் எங்கிட்ட பேசினாங்க. லீட் ரோல்னுதான் சொன்னாங்க. மூணு தடவை ஆடிசன் வச்சாங்க. ஒரு வருஷத்துக்கு வேற எங்கயும் நடிக்க கூடாதுனு அக்ரிமென்ட் போட்டாங்க. சம்பளம், கன்வேயன்ஸ்னு எல்லாத்தையும் பேசினாங்க.

ஆனா ஷூட்டிங் தொடங்கின பிறகும் வெறும் ஐந்து எபிசோடுலதான் நான் நடிச்சேன். பிறகு ஷூட் கூப்பிடவே இல்ல. சம்பளமும் இல்ல. விஜய் சைடுல கேட்டா, பொறுப்பா பதில் சொல்லாதது மட்டுமில்லாம, மலையாளத்துல இருந்து வர்ற நடிகைகளே இப்படித்தான்னு பேசறது, `தமிழ்ல்ல இப்படிதான் இருக்கும், இஷ்டம்னா இரு இல்லாட்டி போனு பேசறதுனு ரொம்ப அடாவடி பண்ணினாங்க. என் சார்பா என் நண்பர் பேசினப்ப அவர்கிட்ட என்னுடைய பர்சனல் விஷயங்களை டச் பன்ணி கொச்சையா பேசினாங்க விஜய்யின் மனைவி நட்சத்திரா.

எனக்கு சோஷியல் மீடியாவுல ஃபாலோயர்ஸ் குறைவா இருக்காங்கன்னு நினைச்சா, என்னை முதல்ல எதுக்கு செலக்ட் பண்ணனும் என ஆவேசமாக ஆதங்கப் பட்டிருந்தார்.

விஜய்யிடமும் நாம் பேசினோம்.

லீட் ரோல் இல்லைங்கிறது அந்தப் பொண்ணுக்கு தெரியும். ஏன்னா நடிக்க தொடங்கி ரெண்டு மாசம் கழிச்சுதான் அக்ரிமென்ட் போட்டாங்க. அந்த அக்ரிமென்ட்ல தெளிவா இருக்கு. அதைப் படிச்சுப் பார்த்து கையெழுத்துப் போட்டிருக்காங்க அவங்க. அதேபோல சம்பளம் தரலைங்கிறதும் உண்மையில்லை. இதுவரை அவங்க நடிச்ச எல்லா எபிசோடுக்குமே சம்பளம் கொடுத்துட்டாங்க. சொல்லப் போனா அட்வான்ஸ் பணமும் இவங்களுக்கு புரடக்ஷன் தரப்புல இருந்து தந்திருக்காங்க. செலவுக்கு சிரமமா இருக்குன்னு நடிக்கறதுக்கு முன்னாடியே கேட்டிருக்காங்க.

இவ்வளவு விஷயங்கள் இருக்க. நான் பணமோசடி பண்ணிட்டேங்கிற ரீதியில் அழுது வீடியோ போட்டா என்ன சொல்றது?

erumasani vijay

என் மனைவி அசிங்கமா பேசிட்டதா சொன்னதுக்கும் பதில் சொல்றேன். ராத்திரி பதினோரு மணிக்கு மேல அந்தப் பொண்ணோட ஆண் நண்பர் போன் பண்ணி அநாகரிகமா கத்திகிட்டே இருந்தா யாருக்குதான் கோபம் வராது? அதனாலதான் என் மனைவியும் கொஞ்சம் கோபமா பேசினாங்க என்கிறார் இவர்.

வெப்சீரிஸ் பெயரோ கோடையில ரிலாக்ஸா இருக்கலாம்னு போற இடமான ரெசார்ட். ஆனா இப்ப அடிக்கிற வெயிலையும் தாண்டி அனலாகக் கொதிக்கிறார்கள் இரண்டு தரப்பும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.