ரஷீத் கானை தேடி வந்த இந்திய குடியுரிமை.. ஆனால் அவரது பதில் என்ன தெரியுமா?
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமக்கு வழங்கிய குடியுரிமை வாய்ப்புகளை நிராகரித்ததாக தனது சுயசரிதையான Rashid Khan: From Streets to Stardom புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஐபிஎல் தொடரின் போது, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர் ஒருவர் அவரை சந்தித்து, "ஆப்கானிஸ்தானில் சூழல் சரியில்லை, எனவே இந்திய குடியுரிமை பெற்று இங்கேயே தங்கி விளையாடுங்கள்" என்று அழைப்பு விடுத்ததாக ரஷீத் தெரிவித்துள்ளார்.
இந்த கனிவான அழைப்பிற்கு நன்றி தெரிவித்த ரஷீத் கான், தனது தாய்நாடான ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதையே பெருமையாக கருதுவதாக கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.
"எனது நாட்டிற்காக விளையாடாவிட்டால், வேறு எந்த நாட்டிற்காகவும் நான் விளையாட மாட்டேன்" என்று தனது தேசப்பற்றை அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2018-ம் ஆண்டிலும் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

