6 போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட்.. சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி போகிறதா?
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்து வரும் தொடர் சவால்கள் காரணமாக, கேப்டன் பொறுப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிக மோசமான படிவத்தில் உள்ளார். முதல் ஆறு போட்டிகளில் முறையே 6, 28, 7, 15, 7 மற்றும் 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர், தொடக்க ஆட்டக்காரராக பவர்பிளே ஓவர்களில் ரன் குவிக்க தவறி வருகிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், கேப்டன்சி சுமை ருதுராஜின் பேட்டிங்கை வெகுவாக பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
"ருதுராஜின் முகத்தைப் பார்த்தாலே அவர் மிகுந்த அழுத்தத்தில் இருப்பது தெரிகிறது. அந்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக, அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்" என்று பத்ரிநாத் யோசனை தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தசைப்பிடிப்பு காரணமாக விளையாடாத எம்.எஸ். தோனியின் இடைவெளி அணியில் தெளிவாக தெரிவதாகவும், டெத் ஓவர்களில் தோனியின் அதிரடி அணிக்கு தேவை என்றும் பத்ரிநாத் கூறியுள்ளார். ஆறு போட்டிகளில் சொதப்பியது கேப்டன் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

