ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத ஸ்லாப்கேட் சர்ச்சை:

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத கசப்பான சம்பவங்களில் ஒன்று 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நடந்த ஸ்லாப்கேட் மோதல். ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்பஜன் சிங் அந்த அறையும் சம்பவத்தை மையமாக வைத்து ஒரு விளம்பரத்தில் நடித்ததே இதற்கு காரணமாகும்.

 

அந்த விளம்பரத்தின் மூலம் ஹர்பஜன் சிங் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும், அதை தன்னை சமூக வலைதளங்களில் பகிருமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

 

"மன்னிக்கத் தெரிந்த எனக்கு, மறக்க தெரியாது" என்று கூறியுள்ள ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார். மேலும், அவருடன் இனி எந்த உறவும் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

"எனது பெற்றோர் எனக்கு மன்னிக்க கற்றுக் கொடுத்துள்ளனர், ஆனால் நடந்ததை மறக்க சொல்லவில்லை. ஹர்பஜன் சகோதரர் போல பழகினாலும், இப்போது அவர் செய்வது அனைத்தும் வெறும் நடிப்பு போலவே எனக்கு தோன்றுகிறது" என ஸ்ரீசாந்த் வேதனை தெரிவித்துள்ளார். 

 

பல நேர்காணல்களில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசினாலும், நிஜத்தில் அவர் அந்த பழைய கசப்பான சம்பவத்தை காசாக்க முயற்சிப்பது ஸ்ரீசாந்தைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.