சூர்யகுமார் யாதவ் பதவி அவுட்.. கேப்டன் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்.. அதிரடி தொடருமா?
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 2026-இல் இந்திய அணி டி20 உலக கோப்பையை தக்கவைக்கக் காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் சந்தித்த தொடர் சரிவு மற்றும் வயது காரணமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி மற்றும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2024-இல் ஐபிஎல் சாம்பியனாக்கியதுடன், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளையும் இறுதிப்போட்டிக்கு வழிநடத்திய அனுபவம் கொண்டவர். மேலும், ஐபிஎல் 2025 மற்றும் 2026 சீசன்களில் முறையே 604 மற்றும் 498 ரன்கள் குவித்து அசத்தலான ஃபார்மில் உள்ளார். திலக் வர்மா அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் இவருக்குத் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
வருகிற ஜூன் 26-ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஸ்ரேயாஸின் புதிய தலைமைப் பயணம் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.