தமிழ் பெயர் வச்சா படம் ஓடாதா? – ‘பிரேக் ஃபாஸ்ட்’ பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகப் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் வழக்கம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பீஸ்ட், தக்லைஃப், ஜெயிலர், கோட் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இது குறித்து பலருக்கு ஆதங்கம் இருந்த நிலையில் , கவிப்பேரரசு வைரமுத்து இதுகுறித்து நேரடியாக ஒரு பட விழாவிலேயே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஷால் முதல் படமான செல்லமே மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் பிரேக் ஃபாஸ்ட் . ராணவ், ரோஸ்மின் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, நான் 46 ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கிறேன். அதில் முப்பது ஆண்டுகளாக இயக்குநர் காந்தி கிருஷ்ணாவை அறிவேன். காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் பி
தொடர்ந்து பேசிய அவர், ஏன் தமிழ் பெயர் வைத்த படம் இங்கு ஓடாதா? ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் தான் ஒரு படம் ஓடும் என்றால், வெளியாகும் ஆங்கிலப் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? பிறகு எதற்காகத் தமிழ்ப் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறீர்கள்?
தயவுசெய்து படங்களுக்குத் தமிழ் பெயர்களை வையுங்கள். இதை ஒரு தமிழனாக எனது ஆதங்கமாக இம்மேடையில் வெளிப்படுத்துகிறேன் என்று பேசினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.