மறுபடியும் ஏன் அப்படி நடிச்சீங்க?!.. சத்யராஜிடம் கோபப்பட்ட விஜயகாந்த்!.. ஒரு பிளாஷ்பேக்..
திரையுலகில் முதலில் வில்லனாக பல படங்களிலும் நடித்து ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறி முன்னணி நடிகராக மாறிய பலரும் இருக்கிறார்கள். தமிழில் சத்யராஜ், சரத்குமார் இருவரையும் அப்படி சொல்லலாம். இருவருமே துவக்கத்தில் நெகட்டிவ்வான வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர்கள்தான்.
அதிலும் சத்யராஜ் பல வருடங்கள் அடியாளாகவும், வில்லனாக மட்டுமே நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகனின் தங்கையை கற்பழிக்கும் கதாபாத்திரத்தில்தான் நடித்தார் சத்யராஜ். அவர் நடித்தாலே அந்த படத்தில் கண்டிப்பாக ஒரு ரேப் சீன் இருக்கும் என ரசிகர்கள் பேசும் அளவுக்கு இருந்தது. அதிலும் அவரது நூறாவது நாள் படமெல்லாம் சத்யராஜை முக்கிய வில்லனாக மாற்றியது.
அதேநேரம், பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார் சத்யராஜ். அந்த படம் ஹிட் அடித்ததால் இனிமேல் வில்லனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் சத்யராஜ். தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க தொடங்கினார்.. ஆனால், நூறாவது நாள் படம் மூலம் சினிமாவில் அவருக்கு வாழ்க்கை கொடுத்த அவரின் நண்பர் மணிவண்ணன் கேட்டுக் கொண்டதால் அமைதிப்படை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார்.

அதேநேரம் அந்த படத்தில் மற்றொரு வேடத்தில் கதாநாயகனாகவும் அவர் நடித்திருப்பார். அந்த படத்தில் வில்லனாக சத்யராஜின் அலட்டலான நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் அமைதிப்படை போல ஒரு பொலிட்டிக்கல் சட்டயர் படம் இதுவரை வரவில்லை என்றே சொல்ல வேண்டும்..
இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘அந்த படத்தை பார்த்த விஜயகாந்த் என்னிடம் ‘மறுபடியும் ஏன் வில்லனா நடிச்சீங்க?.. ஹீரோவாக நல்லாத்தானே போய்ட்டிருக்கு.. மறுபடி இப்படி நடிச்சா எல்லோரும் உங்களை வில்லனா நடிக்க கூப்பிடுவாங்க!.. நீங்க இப்படி நடிக்கக் கூடாது’ என்று சொன்னார்.. அந்த அளவுக்கு என் கெரியர் மீது அக்கறை கொண்டவர் விஜயகாந்த்’ என்ன சத்யராஜ் சொல்லியிருந்தார்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.