இரண்டாவது பொண்டாட்டி கூட ஜாயிண்ட் அடிச்ச மாதம்பட்டி ரங்கராஜ்? என்ன நடந்தது?

Madhampatty Rangaraj: தமிழ் சினிமாவில் பிரபல காஸ்ட்யூம் டிசைனராக இருந்த ஜாய் கிறிஸில்டாவுக்கும் ரங்கராஜ் இருவருக்குமான கல்யாண பிரச்சனை கொளுந்துவிட்டு எரிந்த நிலையில் அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவின் சென்சேஷன் சமையல் கலைஞராக இருந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். டாப் சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதியின் வீட்டு விழாக்களில் சமைத்து புகழ் பெற்றார். தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகும் வாய்ப்பு வந்தது. 

அந்த நேரத்தில் அவருக்கு ஸ்டைலிஸ்ட்டாக இருந்த ஜாய் கிறிஸில்டாவுடன் காதல் கசிந்து இருவருக்கும் திருமணம் முடிந்ததாக கூறப்பட்டது. சில மாதங்கள் அவருடன் வாழ்ந்தவர். பின்னர் முதல் மனைவியுடன் சென்றுவிட்டார். தொடர்ந்து கர்ப்பமான ஜாய் இதை முறையாக தன்னுடைய இன்ஸ்டாவில் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். 

தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடர்ந்தும் மாதம்பட்டி தனக்கு அனுப்பிய வீடியோக்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுக்கவ் விஷயம் பரபரப்பை பற்ற வைத்தது. ஆனாலும் மாதம்பட்டி அதை கண்டுக்கொள்ளாமல் ஜாய்யை கலாய்க்க வைத்தார். 

பின்னர் மகன் பிறக்க அவருக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் மாதம்பட்டி ரங்கராஜின் மகன் தான் என்பது சில நாட்கள் முன்னர் உறுதியானது. இந்நிலையில் இதன் பின்னர் என்ன நடந்தது என பலரும் அவரிடம் கேட்டு இருந்த நிலையில் ஜாய் கிறிஸில்டா இதுகுறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். 

அதில், டிஎன்ஏ பரிசோதனை முடிவால் ரங்கராஜ் ராகாவை தன் மகன் என ஒப்புக்கொண்டு விட்டார். அவனை கைவிட மாட்டேன் எனவும் எல்லா நேரங்களிலும் மகனுடன் இருப்பதாக சொன்னதாகவும் அறிவித்து இருக்கிறார். 

இதற்கு கமெண்ட் செய்து இருக்கும் பலரும் இனிமேல் அவரை நம்பாதீர்கள் எனவும் உங்களிடம் அவர் வந்துவிட்டால் லீகலான முதல் மனைவி என்ன செய்ய வேண்டும் என கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.