ரஜினியை விட விஜய்க்கே மக்கள் செல்வாக்கு – உண்மையை உடைத்த ரவி மரியா!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களுக்கும் இடையே எப்போதுமே ஒரு போட்டி இருந்து வருவது வழக்கம். ஆரம்ப காலங்களில் அவ்வாறு இல்லை. ஆனால் விஜய் முன்னணி இடத்தை நெருங்க நெருஙக ரஜினியை ஒரு போட்டியாளராகவே கருதினார். ஒரு கட்டத்தில் ரஜினியை விய விஜய்க்கு பிசினஸ் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக இருவரது ரசிகர்களும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினி கூட ஒரு விழாவில் காக்கா கழுகு கதை எல்லாம் கூற துவங்கினார். பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கி, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது வரை இணையத்தில் எப்போதுமே விவாதங்கள் அனல் பறக்கும். ரஜினி இதோ அரசியலுக்கு வருகிறேன் என்று பல ஆண்டுகளாக கூறிவந்த நிலையில் தன் உடல் நலன் கருதி அரசியலுக்கு குட் பை கூறினார். இது அவரது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. ஆனால் விஜய் கட்சி துவங்கி தற்போது பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த நடிகர் ரவி மரியா, ரஜினிகாந்தை மக்கள் எப்போதுமே ஒரு மாஸ் ஹீரோவாகவும், உச்ச நட்சத்திரமாகவும் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவரை மக்கள் எப்போதும் தலைவர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் விஜய்யின் நிலைமை முற்றிலும் வேறு. விஜய்யை மக்கள் ஒரு சினிமா நடிகராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அவரைத் தங்கள் சொந்த அண்ணனாக, தம்பியாக, தங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கிறார்கள் என்று கூறினார். அதனால்தான், ரஜினிகாந்திற்கு இருப்பதை விட இன்று விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அவரை ஒருபோதும் அவர்கள் கைவிட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.