பெண் போட்டியாளரிடம் ஆபாசமாகப் பேசினாரா திவாகர்? ’குக்கு வித் கோமாளி’ செட்டில் என்ன நடந்தது?

குக்கு வித் கோமாளி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை அங்கிருந்த புகழ், வினோத், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கியதாக வாட்டர்மெலன் திவாகர் போலீசில் புகார் தர, அந்தப் புகார் தொடர்பாக புகழ், வினோத், ஆனந்த் ஆகியோரை விசாரணை செய்திருக்கிறது போலீஸ்.

‘என் மீது புகழ், ஆனந்த் உள்ளிட்டவர்களுக்குப் பொறாமை. எனக்கு விஜய் டிவி தொடர்ந்து வாய்ப்பு தர்றது இவங்களுக்குப் பிடிக்கலை. அதனால என்னைக் கண்டாலே எரிச்சலடையறாங்க. வினோத்துக்கும் எனக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலயே பிரச்னை. அந்தப் பகையை மனசுல வச்சு அவரும் இவங்களோட சேர்ந்துகிட்டார்.

’குக்கு வித் கோமாளி’க்கு சேனல்தான் என்னைக் கூப்பிட்டது. அங்கபோனதும் இவங்க என்னைக் கலாய்க்கறது கேலி செய்யறதுன்னு பண்ணினாங்க.

நானும் பதிலுக்குப் பேசினேன்.

வாக்குவாதம் போயிட்டிருந்தபோதே ஆனந்த் பக்கத்துல இருந்த ஒரு கம்பியை எடுத்துட்டு வந்து என் காலில் தாக்கினார். ரத்தமெல்லாம்கூட வந்துச்சு. அதனாலதான் போலீசுக்குப் போனேன்’ என்பதுதான் திவாகரின் புகார்.

திவாகர்

இந்தப் புகார் கொடுக்கப்பட்ட அடுத்தநாளே புகழ், வினோத் ஆகியோர் போலீசார் முன் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தைத் தந்து விட்டனர். ஆனந்த் வெளியூரில் இருந்ததால் அன்று விசாரணைக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி தன் தரப்பு பதிலை தந்தார் ஆனந்த்.

காவல் நிலையத்தில் ஆஜராகிவிட்டு வந்த மாகாபா ஆனந்திடம் பேசினோம்.

‘’பிக் பாஸ் முடிஞ்சு ரொம்ப நாளாச்சு. அந்தாளுக்கு தன்னைப் பத்தி யாராவது ஏதாவது பேசிட்டே இருக்கணும். அதனாலதான் இல்லாத விஷயத்தைப் பேசி விளம்பரம் தேடிக்கிடுறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் குடிச்சுட்டு வந்ததாகச் சொல்றார். அந்த ஷோ காலையில ஆரம்பிச்சா நடுராத்திரி வரைக்கும்போகும். நான் குடிச்சிட்டு போனா அவ்வளவு நேரம் எப்படிங்க ஆங்கரிங் பண்ண முடியும்?

ஷூட்டிங் ஸ்பாட்ல பிரச்னை எழுந்ததே அவராலதான். காமெடிங்கிற பேர்ல கொச்சையா அவர் பேசினா எல்லாரும் எப்படி பேசாம இருப்பாங்க.

சக போட்டியாளர் ஒருத்தர் மனைவியின் தோளில் அந்தப் போட்டியாளர் கண் முன்னே கையப் போட்டு பேசறதெல்லாம் எப்படிங்க எடுத்துகிடறது?

மாகாபா ஆனந்த்

முன்பு அண்டகாகசம் நிகழ்ச்சியில கலந்துகிட்டபோதும் இதேபோல பிரச்னை பண்ணிட்டிருந்தார். ஒருகட்டத்துல சேனலே இவரைப் போகச் சொல்லிடுச்சு.

என்னாலதான் சேனல் அனுப்பிடுச்சுன்னு வெளியில சொல்லிட்டுத் திரிஞ்சார்.

இவர் பண்ணின சேட்டைகளுக்கெல்லாம் ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு.

போலீஸ்லயும் நடந்த எல்லாத்தையும் விளக்கமா சொல்லியிருக்கேன். அவங்க இனி விசாரிப்பாங்க.

விசாரணை முடிவுல யார் பக்கம் தப்பு இருக்குங்கிறது தெரிய வந்துடும்.

இந்த மாதிரி கன்டென்ட் தேடி அலைஞ்சிட்டிருக்கிற விளம்பரப் பிரியர்கள் கிட்ட எச்சரிக்கையா இருந்திருக்கணும். அப்படி இல்லாம இருந்ததாலதான் இப்ப வருஷப் பிறப்பும் அதுவுமா போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வரவேண்டி ஆகிடுச்சு’’ என்றார் ஆனந்த்.

கானா வினோத்துடன் மன்னர் முத்து
கானா வினோத்துடன் மன்னர் முத்து

வினோத்திடம் பேசினோம்.

‘’நான் விசாரணைக்குப் போனப்ப ஸ்டேஷனுக்கு வந்திருந்தார் திவாகர். போலீஸ்கிட்ட என் தரப்பு விளக்கத்தை தந்துட்டேன். ஆனா அவர் தரப்புல புதுசு புதுசா என்னென்னவோ சொல்லிட்டிருந்தாப்ல. போலீஸ் புகார் வந்ததால் எங்க டியூட்டியைச் செய்ய உங்களை விசாரணைக்கு அழைச்சோம்னு சொன்னாங்க. திவாகர் ஷூட்டிங் ஸ்பாட்ல பெண்கள்கிட்ட மரியாதையா பழகறதில்லை. அதனால இவர் கலந்துகிடற ஷூட்டிங்கில் இனி கலந்துகொள்ளக்கூடாதுனு முடிவு செய்திருக்கேன்’ என்கிறார் வினோத்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.