நாம கேட்டதை செய்ய இப்போதைக்கு சட்டம் இருக்கு – லெனின் பாண்டியன் டிரைலர் வெளியீடு

இதயம், மூன்றாம்பிறை, ஆனஸ்ட்ராஜ் என பல வெற்றிப்படங்களை கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் தயரிப்பில் உருவாகியுள்ள படம் லெனின் பாண்டியன்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் 2வது மகன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாகஅறிமுகம் ஆகிறார். இவரது மூத்த் மகன் ஜூனியர் சிவாஜி என்ற பெய்ரில் சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய பாத்திரத்தில் கங்கை அமரன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஆந்திர அரசியலில் பிஸியாக இருக்கும் ரோஜா இப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். டி.கே.பால்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் லெனின் பாண்டியன் படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிரைலரை வெளியிட்டு பேசிஅய் வெங்கட் பிரபு, லெனின் பாண்டியன் படத்தின் டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. எனது தந்தை இவ்வளவு முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.

ஒரு தரமான கிராமத்து ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.