Siragadikka Aasai: மனோஜுக்கு நடந்த நிச்சயத்தார்த்தம்… ரோகிணி என்ன ஆட்டம் போட போறாங்களோ?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்தக்கட்டமாக தற்போது மனோஜுக்கு இரண்டாம் கல்யாண வேலைகளை விஜயா தொடங்கி விட்டார். 

மலேசியா பெண், பணக்காரி என டயலாக் விட்டு வந்த ரோகிணியின் எல்லா பொய்களும் உடைந்து விட்ட நிலையில் அவரை விஜயா வெளியேற்றி விட்டார். தற்போது இருவருக்குமான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. 

தற்போது மனோஜுக்கு பெரிய பணக்காரியை கல்யாணம் செய்து வைக்க விஜயா மும்முரமாக பெண் தேடி வந்தார். அப்படி அவருக்கு தற்போது ஒரு அமெரிக்க பெண் கிடைத்துவிட அவசர அவசரமாக நிச்சயத்தை முடித்துவிட்டார். 

இதற்கிடையில் ரோகிணி விவாகரத்து வழக்கில் பெரிய இடியாக தன்னுடைய எமோஷனல் டிராமாவை போட்டு அடுத்த 6 மாசத்துக்கு ஜீவனாம்சம் கொடுத்து நீதிபதி வழக்கை தள்ளி வைத்து இருக்கிறார். இதை விஜயா பேச்சை கேட்டு வீட்டில் மறைத்து வைத்து இருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது கல்யாண வேலைகளை தொடங்கினால் ரோகிணி கண்டிப்பாக இறங்கி விளையாட போகிறார். இதனால் மீண்டும் வழக்கு பிரச்சனையாகி ரோகிணி வீட்டுக்குள் வரும் நிலைக்கூட உருவாகலாம். அதும் இல்லாமல் வீட்டை விஜயா விற்றும் விட்டார். 

சிந்தாமணிக்கு சத்யா காதல் விவகாரம் தெரிவது போல புரோமோ வேறு வெளியாகி இருப்பதால் குடும்பத்தையே துரத்த போகிறார். இதனால் பல மாதமாக டல்லடித்த சிறகடிக்க ஆசை பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.