என்னோட ஒரு நாள் இருக்கியா? சக நடிகையை அசிங்கமாக கேட்ட வாட்டர்மெலன் ஸ்டார்!!

Cook with comali 7: குக் வித் கோமாளி 7வது சீசன் தொடங்கி இரண்டு வாரம் மட்டுமே முடிந்து இருக்கும் நிலையில் பிரச்சனை பெரிதாக தொடங்கிவிட்டு இருக்கிறது. இதுகுறித்து பல அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பாசிட்டிவ்களால் பிரபலம் ஆகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சில சீசன்களால் பிரச்சினையை மட்டுமே சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சீசன் ஓரளவு நல்ல பெயருடன் முடித்து ஏழாவது சீசனை பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கினர்.

இதில் பல புதிய கோமாளிகள் அறிமுகமாகினர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகரையும் தயாரிப்புக் குழு இணைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பின்னர் தன்னை மகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் அடித்ததாக நசரேத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் இன்னும் பல மீடியாக்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்த வண்ணம் இருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்த விசாரணைக்காக ஒவ்வொரு அழைக்கப்பட்ட நிலையில் மாகாபா ஆனந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியான தகவலாக மாறியிருக்கிறது. அவர் கூறும் போது திவாகர் நிகழ்ச்சிக்குள் தரக்குறைவாக நடந்து கொண்டார்.

அண்டாகாகசம் நிகழ்ச்சியிலும் அவர் நான்கு எபிசோடுகளில் இருந்தார் ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களிடம் அவர் பேசியது முகம் சுழிக்க வைக்கும் விதமாக இருந்ததால் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இவரை டிவி நிர்வாகம் வெளியேற்றியது.

 அதுபோல இந்த நிகழ்ச்சியிலும் அவர் பிரபலங்களிடம் நடந்து கொண்ட விதம் அருவருப்பாக இருந்தது. காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவிடம் அவர் கணவர் கண் முன்னாலே தோள் மீது கை போட்டு இத்தனை நாள் உன் புருஷன் உடன் இருந்த, இன்று என்னுடன் இருந்து விடு என பேசியது பலருக்கு அருவருப்பாக அங்கு இருந்தது.

என்னை குடிகாரன் என கூறினார். 18 மணி நேரம் நின்று வேலை செய்யும் என்னால் குடித்துவிட்டு தொகுத்து வழங்க முடியுமா? நிகழ்ச்சிக்குள் அவர் சாதி ரீதியாக பலரையும் திட்டியதால் பலருக்கும் அவர் மீது வெறுப்பு தோன்றியதாலே டிவி நிர்வாகம் அவரை தடை செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.