தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதி!

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகம் அனவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். முதல் படமே மிக சர்ச்சையான கதையானதால் படம் தோல்வியை தழுவியது. ஆனல் சுதாக்ரித்துகொண்ட ஹரிஷ் அடுத்த படங்களை கவனமுடன் செய்ய துவங்கினார். இவரது நடிப்பில் பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து என வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

சென்னையைச் சேர்ந்த நர்மதா என்பவரை ஹரிஷ் கல்யாணுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது தங்களது குழந்தைக்கு கிரியா ஹரிஷ் எனப் பெயர் சூட்டியுள்ளதாகத் தமிழ் புத்தாண்டு தினமான இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிக்கு, திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.