இறங்கி வந்த அஜித்… இந்த முறையும் நோ சொன்ன ஏஜிஎஸ்

தமிழ் சினிமா உலகில் விஜய்க்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். ஆனால் வியாபாரத்தில் விஜய் இடத்தை அவரால் நெருங்க கூட முடியவில்லை. அவரது சமீபத்திய படங்கள் எதுவும் பெரிதாக வசூல் செய்யவில்லை. லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் அஜித் நடித்த விடாமுயற்சி அந்த நிறுவனத்தை சுத்தமாக காலி செய்தது. ஏற்கெனவே இவர்களை இந்தியன் 2 , வேடையான் போன்ற படங்கள் பதம் பார்த்தன. இந்த நிலையில் இவர்கள் பெரிதும் எதிர்பார்த்த விடா முயற்சி அட்டர்பிளாப் ஆனது. இதற்கு அடுத்து வந்த ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய குட் பேட் ஆக்லி ரசிகர்களை திருப்திபடுத்தியது. ஆனால் அப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நஷ்டத்தை ஏறபடுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் இயக்க உள்ளார் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த படம் இப்போது வரை டேக் ஆப் ஆகவில்லை. காரணம் அஜித்தின் ரேஸ் கமிட்மெண்ட் மட்டுமல்லால் அந்த படத்திற்கான தயரிப்பாளர் கிடைக்கததே. அஜித் அடுத்த படத்திற்கு ரூ 185 கோடி சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பளத்தை கொடுத்து படம் எடுத்தால் நிச்சயம் லாபம் கிடைக்காது என்பதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் பின்வாங்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அஜித் தற்போது தனது சம்பளத்தில் ரூ.20 கோடி குறைத்து கொள்ள முன்வந்துள்ளாராம். இதனை அடுத்து அஜித் தரப்பில் பிரபல தயரிப்பு நிறுவனமான ஏஜிஎஸிடம் சென்றுள்ளனர். அவர்கள் கணக்கு படி இந்த சம்பளத்தை கொடுத்தாலும் கூட நிச்சயம் ரிஸ்க்தான் என கூறி மறுத்துள்ளனர். இன்னும் சம்பளத்தை கணிசமாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளனராம். ஏற்கெனவே இதே நிறுவனத்திடம் அஜித் தரப்பில் சென்றதும், அப்போதும் அவர்கள் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் அஜித் தனது சம்பளத்தை குறைத்தால் மட்டுமே அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரும் என்பது நன்றாகவே தெரிகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.