LIK: படம் எப்படா முடியும்… காட்டு மொக்கையாக இருந்தாலும்…புளுசட்டை மாறனின் LIK விமர்சனம்

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்க நாதன் நடிப்பில் நேற்று வெளியான படம் LIK . விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2040ல் காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் ஆதிக்கம் செய்கிறது . அதிலிருந்து அந்த ஹீரோ மீண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஆகும். நல்ல கதையை இன்னும் கொஞ்சம் பெருகேற்றி திரைக்கதை அமைத்திருந்தால் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பது பலரது கருத்து. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் நல்ல வசூலையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிரபல விமர்சகர் புளுசட்டை மாறன் LIK படம் குறித்த விமர்சனத்தை தனது சேனலில் வெளிட்டுள்ளார். அதில் கதையாக பார்த்தால் இது வித்யாசமான கதைதான். ஆனால் அந்த கதையை இவங்களே நம்பவும் இல்லை, அந்த கதைக்கான முடிவை தேடி போகவுமில்லை. கதைபடி மகனை ஆர்கானிக்கா வளர்கிற அப்பா, அப்டேடடா வளர்கிற அம்மா இதில் எது சரி என்பதைதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இந்த கதையை ஒரு ஹீரோ வில்லன் கதையா கொண்டு போய்டாங்க. இதுதான் இந்த படத்தின் பெரிய பிரச்சனை.

சரி அதைதான் சரியாக செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. பல காட்சிகள் இப்படிதான் இருக்கும் என்பதை நாம் முன்கூட்டியே யூகிக்கும் படிதான் உள்ளது காட்சிக அமைப்புகள். காமெடி காட்சிகளும் ஒர்கவுட் ஆகவில்லை. படத்தின் பல காட்சிகள் மேம்போக்காகவே சொல்லியதால் படத்தில் ஒன்றி பார்க்க முடியவில்லை. படம் எப்படா முடியும் என்றே தோன்றியது. இவ்வளவு காட்டு மொக்கையா இருந்தாலும் படத்தை ஓரளவிற்காவது பார்க்க வைப்பது ரவிவர்மன் கேமராவும், மற்றும் சிஜி ஒர்க் தான்.

இந்த படம் இவ்வளவு காட்டு மொக்கையா இருக்கும் என்பதில் எங்களுக்கு எவ்வித அதிர்ச்சியும் இல்லை. இந்த படம் ட்யூட் படத்திற்கு முன் வரவேண்டியது. ஆனால் படம் எடுத்த்வர்கள் படத்தை பார்த்திருப்பார்கள் அல்லவா. என்ன லட்சனத்தில் வந்திருக்கு என்று. அதனால பாதுகாப்பாக ஏப்ரல் விடுமுறை காலம் மட்டுமின்றி வேறு எந்த படங்களும் போட்டிக்கு இல்லை என்பதால் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். மொத்ததில் படம் ஆடியன்ஸை கனெக்ட் செய்யவே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.