20,000 கோடிக்கு ஆசைப்பட்டு வருகிறார்; பித்தலாட்டகாரர் – நடிகர் விஜய்யை கடுமையாக விளாசிய ஜேம்ஸ் வசந்தன்!

தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தற்போது சினிமாவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகம் என்ற் கட்சியை துவக்கி முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இவரது அரசியல் வருகை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் நலல் வவரேற்பு கிடைத்தது. ஆனால் கரூர் சம்பவம் மற்றும் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு விஜய் மீதான நன்மதிப்பை சற்றே சரித்துவிட்டது என்றே கூறலாம். அதிலும் நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பொதுமக்கள் பெரிதாக ரசிக்கவில்லை.

விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தரப்பினர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன. விஜயின் உண்மையான நோக்கம் தான் என்ன? அவருடன் இப்ருப்பவர்களின் நடவடிக்கைகளை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தொடக்கம் முதலே விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தற்போது அவர் விஜய்யைக் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஒன்றும் தூயவர் கிடையாது. சினிமாவில் கிடைக்கும் 200 கோடியை விட்டுவிட்டு, இங்கே அரசியலில் 20,000 கோடி அடிக்கலாம் என்று தெரிந்துதான் அவர் வருகிறார். அவர் கூட யாரு அட்வைசராக இருக்கிறார்கள்? அனைவரும் சேர்ந்து திட்டமிட்டுத்தான் வருகிறார்கள். இதனை விஜய் பின்னால் நிற்பவர்களில் பாதிப் பேர் நம்ப மாட்டார்கள்; பாதிப் பேருக்குப் புரியாது. ஆனால், தெரிந்தவன் தெரிந்துதான் வருகிறான் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய்யைப் பார்த்துத் தானும் இந்த மாதிரி சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில், தங்களது சொந்த நிலம், வீடு என அனைத்தையும் விற்றுவிட்டு வேட்பாளர்களாக நிற்பவர்கள், தேர்தலுக்குப் பின் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்கும் ஒரு சிலர் நிச்சயம் விபரீத முடிவை எடுப்பார்கள். இது நடக்கவில்லை என்றால் ஏன் என்று தேர்தலுக்குப் பிறகு என்னிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒருத்தர் கண்ணைப் பார்த்தால், அவரது உடல் மொழியை பார்த்தால் அவர் எப்பேர்ப்பட்டவர் என்பது தெரிந்துவிடும். அந்த வகையில் விஜய்யைப் பார்த்தால், அவர் ஒரு ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர் என்பது அவரது உடல் மொழியிலேயே எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் அவரை என்னால் இவ்வளவு வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது என்று கூறியுள்ளார்.

ஜேம்ஸ்வசந்த பேசிய அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

200 கோடிய விட்டுட்டு 20000 கோடிய அடிக்க வந்துருக்கான் விஜய்

அவன் யோக்கியன் கிடையாது கூட இருக்கவங்களும் அப்டி தான்

—- ஜேம்ஸ் வசந்தன் #TVKVijay‌ pic.twitter.com/orE1oKt4BC

— Natarajan (@natarajan333) April 5, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.