கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது அவ்ர் நடிப்பிலும் பிஸியாக உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது.

விழாவில் பேசிய செல்வராகவன்,

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அசுரத்தனமாக உழைத்தனர். அவர்களைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எப்போது தூங்குவார்கள், எப்போது சாப்பிடுவார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு இரவு பகல் பார்க்காத கடும் உழைப்பாளிகள். அவர்களைப் பார்த்து, ‘ஓ… இப்படியும் படம் எடுக்கலாமா!’ என நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்று படக்குழுவினரை மனதாரப் பாராட்டினார்.

தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த நடிகை கௌசல்யா குறித்துப் பேசிய செல்வராகவன், எனக்கு கௌசல்யானா அவ்ளோ இஷ்டம். ஒரு காலத்தில் திரையில் கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு ஊத்தி இருக்கிறேன். அப்படி ரசித்த ஒரு நடிகையின் அருகிலேயே இப்போது இந்த நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று சிரித்தபடியே கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.