வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்
இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
15 வயதே ஆன இந்த இளம் வீரரின் அதிரடி ஆட்டத்தை கண்டு முகமது கைஃப், மைக்கேல் வாகன் போன்ற ஜாம்பவான்கள் வியந்து போனதுடன், அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதற்கு மாற்று கருத்தை தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "வைபவ் இன்னும் ஒரு சிறுவன், அவருக்கு இன்னும் 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை மீதமுள்ளது. அவரை இப்போதே அவசரப்படுத்தி நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம். அவர் இந்தியாவிற்காக விளையாடும் தகுதி கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதற்கான சரியான நேரம் வரும்போது அது தானாக நடக்கும். நாம் ஏன் எப்போதும் அவசரப்பட வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
கௌஹாத்தி போன்ற கடினமான ஆடுகளத்தில் வைபவ் காட்டிய பேட் வேகம் மற்றும் ஷாட்கள் சிஎஸ்கே அணியையே நிலைகுலையச் செய்ததாகவும் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.