முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!

கௌஹாத்தியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிடுபொடியாக்கியது. 

 

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் தலா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ராஜஸ்தான் தரப்பில் நந்த்ரே பர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

128 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூரியவன்ஷி மின்னல் வேக தொடக்கம் கொடுத்தார். அவர் வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் (3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

 

 ஜெய்ஸ்வால் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 26 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்திய நந்த்ரே பர்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.