44 வயதான தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாட வேண்டும்.. முன்னாள் தமிழக வீரர் கருத்து..!

ஐபிஎல் 2026 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், எம்.எஸ். தோனியின் தற்போதைய பங்களிப்பு குறித்து முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார். 

 

44 வயதாகும் தோனி, கடந்த சீசனில் 8-வது வீரராக களம் இறங்கி 14 போட்டிகளில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனியின் பேட்டிங் அதிரடி ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தாலும், ஒரு கிரிக்கெட் வீரராக அனைத்து போட்டிகளிலும் விளையாடும் திறன் அவருக்கு இன்னும் இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும் என்று பத்ரிநாத் கூறியுள்ளார். 

 

குறிப்பாக, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அணிக்குள் வந்துள்ள நிலையில், தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாடுவதே சரியாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

 

ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஷிப்பில் தோனியின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதும் விவாத பொருளாகியுள்ளது. இருப்பினும், தோனி அணியில் இருக்க சம்மதித்துவிட்டாலே அவர் களத்தில் இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

 

4 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்ட தோனியின் மதிப்பு இந்த சீசனில் எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.