சிம்பு நெக்ஸ்ட்… குரங்கு பர்ஸ்ட் – முருகதாஸ் எடுத்த திடீர் முடிவு

அஜித் நடித்த தினா, விஜய்காந்த் நடித்த ரமணா விஜய் நடித்த துப்பாக்கி , கத்தி என பல் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி பட்ம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் ஏ.அர்.முருகதாஸ் நடிகர் சிம்புவை வைத்து ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சிம்பு தற்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு (STR 48 உள்ளிட்டவை) வரிசையாக கால்ஷீட் கொடுத்து மிகவும் பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் வெற்றிமாரன் இயக்கத்தில் அரசன், அடுத்து அஸ்வத் மாரிமுத்து, அதற்கு அடுத்து கீர்த்தீஸ்வரன் என வரிசையாக காலிஷீட் கொடுத்துள்ளார். இந்த கமிட்மென்ட்களை எல்லாம் முடித்துவிட்டு முருகதாஸ் படத்திற்கு வருவதற்கு சிம்புவுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

சிம்புவுக்காக இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்து நேரத்தை வீணடிக்க விரும்பாத முருகதாஸ் வேறு ஒரு திட்டத்தில் உள்ளார். நீண்ட நாட்களாகவே ஒரு குரங்கை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது நீண்டகால கனவு. படத்தின் பட்ஜெட், சிஜி பணிகள் போன்ற காரணங்களால் அந்தத் திட்டத்தை அவர் ஒத்திவைத்துக் கொண்டே வந்தார். தற்போது சிம்புவின் கால்ஷீட்டிற்காகக் காத்திருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி, தனது குரங்கு கதையைத் திரைப்படமாக உருவாக்கும் வேலைகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

பான் இந்தியா அளவில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.