`ஆப்ரேஷன் சிந்தூரை மையப்படுத்தியது- அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. தி காஷ்மீர் ஃபைல்ஸ், தி வாசின் வார் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

இப்போது அவருடைய அடுத்த படத்தை இயக்குவதற்கும் தயாராகிவிட்டார். ஆப்ரேஷன் சிந்தூர் சம்பவத்தை மையமாக வைத்து அவருடைய அடுத்த படம் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

Vivek Agnihotri

இந்தப் படம், லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். ‘டைனி’ தில்லோன் எழுதிய Operation Sindoor: The Untold Story of India’s Deep Strikes Inside Pakistan என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. T-சீரீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, அவை நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் அத்தகைய ஒரு கதை.

நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டிய கதை இது. இது வெறும் திரைப்படம் அல்ல. இது ஒரு வெளிப்பாடு.

ஒரு நாடு இத்தகைய பெரிய நிகழ்வுகளைச் சந்திக்கும் போது, அவற்றை உண்மையாக ஆவணப்படுத்துவது முக்கியம்.” எனக் கூறியிருக்கிறார்.

Operation Sindoor - Vivek Agnihotri
Operation Sindoor - Vivek Agnihotri

இவரைத் தொடர்ந்து இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “இது வெறும் திரைப்படம் அல்ல.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழி வாங்கியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானைத் தண்டித்ததோடு, நவீன போரில் தன் வலிமையை நிரூபித்துள்ளது.” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.