எனக்கு யாருமே பெண் கொடுக்க முன்வரவில்லை: 60 வயது தமிழக கிரிக்கெட் வீரரின் ஆதங்கம்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் லட்சுமணன் சிவராமகிருஷ்ணன், தனது வாழ்வின் இருண்ட பக்கங்களான மன அழுத்தம் மற்றும் மதுப்பழக்கம் குறித்த போராட்டத்தை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

 

17 வயதிலேயே இந்திய அணியில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், மிகச்சிறிய வயதிலேயே "குடிகாரர்" மற்றும் "போதைப்பொருள் அடிமை" என்ற தவறான முத்திரை குத்தப்பட்டார். இந்த அவதூறுகளால் சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தும் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்றும், திருமண விளம்பரத்திற்கு ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

 

1987 உலகக்கோப்பைக்கு பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்ட விதம் அவரை பெரிதும் பாதித்தது. குறிப்பாக, கோவிட் லாக்டவுன் காலத்தில் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான அவர், தற்கொலை எண்ணங்கள் மற்றும் மாயத்தோற்றங்களால் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். 

 

தூக்கத்திற்காக மதுவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையும், கண்ணை மூடினால் பயங்கரமான உருவங்கள் தெரிந்ததாகவும் அவர் விவரித்துள்ளார். இனவெறி மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை தாண்டி, ஒரு சாதனையாளரின் மனப்போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இவரது வாக்குமூலம் அமைந்துள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.