16,706 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆர்சிபி அணி.. பெயர் மாற்றமா? அனன்யா முக்கிய தகவல்..!

ஐபிஎல் தொடரின் புகழ்பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு சுமார் 16,706 கோடி ரூபாய்க்கு முழுமையாக விலைக்கு வாங்கியுள்ளது. 

 

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடமிருந்து நடைபெற்ற இந்த மெகா விற்பனையில் பிளாக்ஸ்டோன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் அமெரிக்க முதலீட்டாளர் டேவிட் பிளிட்சரின் போல்ட் வென்ச்சர்ஸ் ஆகியவையும் இணைந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக ஆர்சிபி இப்போது உருவெடுத்துள்ளது.

 

புதிய நிர்வாகத்தின் கீழ் அணியின் பெயர் மாற்றப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த அனன்யா பிர்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி அணியின் பெயர் மாற்றப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

 

2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆர்சிபி, கடந்த 2025-ஆம் ஆண்டு தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனை ஒப்பந்தம் ஆர்சிபி ஆண்கள் அணி மற்றும் மகளிர் அணி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். நிர்வாகம் மாறினாலும், ரசிகர்களின் விருப்பமான ஆர்சிபி என்ற அடையாளம் அப்படியே தொடர்வது உறுதியாகியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.