சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி யார் யார்? ஒரு ஆச்சரிய தகவல்..!

ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி குறித்த முக்கிய தகவலை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த சீசனில் டாப் ஆர்டர் பேட்டிங்கில் சந்தித்த சவால்களை முறியடிக்க, இந்த முறை அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனுடன் இணைந்து தான் இன்னிங்ஸை தொடங்கப்போவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டது இந்த ஆண்டின் மிகப்பெரிய வர்த்தகமாக பார்க்கப்படுகிறது.

 

கடந்த ஆண்டு ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே போன்ற வீரர்கள் சோதித்து பார்க்கப்பட்டும் சரியான பலன் கிடைக்கவில்லை. பின்னர் ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்கள் ஓரளவுக்கு அதிரடி காட்டினர். 

 

இருப்பினும், ஒரு நிலையான தொடக்கத்தை உறுதி செய்ய ருதுராஜ் - சஞ்சு சாம்சன் கூட்டணி களமிறங்குகிறது. சிஎஸ்கே தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 30-ஆம் தேதி குவஹாத்தியில் எதிர்கொள்கிறது. சென்னையில் ஏப்ரல் 3-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஹோம் மேட்ச் நடைபெற உள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.