கெளதம் காம்பீரின் டீப்ஃபேக் வீடியோ.. கூகுள், மெட்டா, அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் உருவம், குரல் மற்றும் அடையாளங்களை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தவறாக பயன்படுத்திய புகாரில், சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்க கூகுள், மெட்டா மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கியதற்கும், அதன் மூலம் வணிக ரீதியாக லாபம் ஈட்டியதற்கும் எதிராக கம்பீர் வழக்கு தொடர்ந்தார்.
குறிப்பாக, ஒரு போட்டியில் தோல்வி அடைந்த பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்வது போன்றும், சக வீரரை தாக்குவது போன்றும் ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளன. இது தனது கண்ணியத்திற்கும், வணிக மதிப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி ரூ.2.5 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார்.
மேலும், அமேசான் போன்ற தளங்களில் அனுமதி இன்றி அவரது உருவம் பதித்த பொருட்கள் விற்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு காலத்தில் பொது ஆளுமைகளின் உரிமைகளை பாதுகாக்க இத்தகைய சட்ட நடவடிக்கை அவசியம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.