மறைந்த பின்னர் ஷேர் வார்னே குடும்பத்திற்கு கிடைக்கும் ரூ.450 கோடி.. ராயல் ராஜஸ்தான் அணி ஏன் கொடுக்கிறது?
மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் தீர்க்கதரிசனத்தால், அவரது குடும்பத்திற்கு சுமார் 450 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது.
2008-ல் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வார்னே ஒப்பந்தமானபோது, ஒரு சுவாரசியமான நிபந்தனையை சேர்த்திருந்தார். அதன்படி, அவர் விளையாடும் ஒவ்வொரு ஆண்டிற்கும் அணியின் உரிமையில் 0.75 சதவீத பங்குகளை பெறுவார்.
நான்கு சீசன்கள் விளையாடிய வார்னே, மொத்தம் 3 சதவீத பங்குகளை தன்வசப்படுத்தினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சுமார் ₹15,290 கோடி என்ற பிரம்மாண்ட விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை மூலம் வார்னேவின் 3 சதவீத பங்கின் மதிப்பு 450 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 2022-ல் அவர் மறைந்தாலும், 18 ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்ட ஒப்பந்தம் இன்று அவரது குடும்பத்திற்கு பெரும் நிதியுதவியாக மாறியுள்ளது.
பிசிசிஐ ஒப்புதலுக்குப் பிறகு, 2026 ஐபிஎல் முடிவில் இந்த தொகை வார்னேவின் குடும்பத்தை சென்றடையும். மைதானத்தில் மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் வார்னே ஒரு மந்திரவாதிதான் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.