முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் லீடர். கொடி, கருடன் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், லால், ‘பாகுபலி’ பிரபாகர் மற்றும் ‘லியோ’ புகழ் பேபி இயல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் லீடர் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல்படமான தி லெஜெண்ட் படத்தில் ஏற்பட்ட தவறுகளை இந்த படத்தில் முழுமையாக மாற்றியுள்ளார் என்பது நன்கு தெரிகிறது.

இந்த நிலையில் லீடர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிர ஏப்.3ம் தேதி வெளியாகிரது. முன்னதாக ஏப்.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னதகவே லீடர் வெளியாகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.