உன்ன விட!.. நடிகையை மனதில் வைத்து விருமாண்டி பாடலை எழுதிய கமல்
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த திரைப்படம் விருமாண்டி. இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில சாதி அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் விருமாண்டி என தலைப்பை மாற்றினார் கமல். 2004ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் கமலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல’ என்கிற அசத்தலான மெலடியை இந்த படத்திற்காக இளையராஜா கொடுத்திருந்தார். இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய கமல் நடிகை கௌதமியை மனதில் நினைத்தே இந்த பாடலை எழுதியதாக கூறினார். அப்போது கமலும் கௌதமியும் லிவ்விங் டூ கெதர் உறவில் இருந்தனர். கமலின் வீட்டில்தான் கௌதமி தங்கியிருந்தார். இந்த பாடல் பற்றி பேசிய காம்ல் ‘உன்ன விட உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல.. உன்ன விட உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல’ கௌதமியை நினைத்துதான் எழுதினேன்.
‘வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி.. சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி’ என எழுதியிருந்தேன்.. அதில் சந்திரன் என்பது சொன்னது என் அண்ணன் சந்திரஹாசனை நினைத்து எழுதியது என்ன சொல்லியிருந்தார் கமல்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


