ஐபிஎல் 2026: கடைசி நேரத்தில் திடீரென புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ.. வீரர்கள் அதிருப்தி..!

மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள 19-வது ஐபிஎல்  தொடருக்காக பிசிசிஐ, கடைசி நேரத்தில் திடீரென அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது. 

 

முதல் போட்டியான நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, பத்து அணிகளுக்கும் கடுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக, மைதானத்தின் பிட்ச் தன்மையை பராமரிக்க, போட்டி நடைபெறும் நாட்களில் அணிகள் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மும்பை வான்கடே போன்ற மைதானங்களில் வலைப்பயிற்சிக்கு குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். எதிரணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மற்ற அணிகள் பயன்படுத்தக் கூடாது. வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பயிற்சி நேரங்களில் மைதானத்திற்குள் நுழைய அனுமதியில்லை; அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே ஆட்டத்தை காண முடியும். 

 

வீரர்கள் அனைவரும் அணி பேருந்திலேயே பயணம் செய்ய வேண்டும் என்றும், பரிசு வழங்கும் நிகழ்வுகளின் போது ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளை அணிவது குறித்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தொடரின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பேண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.