27 வயதான மாடல் அழகியுடன் 15 வயது ரொனால்டோ மகன் டேட்டிங்? புகைப்படம் வைரல்..!

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயத்தால் ஓய்வில் இருக்கும் வேளையில், அவரது 15 வயது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் குறித்த விசித்திரமான வதந்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. 

 

27 வயதான பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவருடன் ரொனால்டோ ஜூனியர் காதலில் இருப்பதாக கூறப்படும் செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. துபாயில் இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டதாக கூறி சில புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

 

இருப்பினும், இந்தத் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை எனத் தெரியவந்துள்ளது. ரொனால்டோ ஜூனியருக்கு தற்போது வெறும் 15 வயது மட்டுமே ஆகிறது என்பதால், இந்த வதந்திகள் பொருத்தமற்றவை என விமர்சிக்கப்படுகிறது. 

 

கடந்த காலங்களில் தனது குடும்ப நிகழ்ச்சிகளில் தனக்கு காதலி யாரும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது அவரது முழு கவனமும் கால்பந்து விளையாட்டு மற்றும் குடும்பத்தின் மீதே உள்ளது. இதற்கு முன்பும் லூயிஸ் சுவாரஸின் மகளுடன் அவரை இணைத்து வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. தற்போது பரவும் இந்த பிரேசில் மாடல் குறித்த செய்தி முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.