3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முக்கிய வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திட்டம் என்ன?


 

 

ஐபிஎல் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி காயங்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ஜாக் எட்வர்ட்ஸ் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மாற்றாக, 35 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் பெயின் 1.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

 

சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல டேவிட் பெயின் முக்கிய காரணமாக இருந்தார். இறுதி போட்டியில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

 

233 டி20 போட்டிகளில் விளையாடி 304 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவரது அனுபவம் ஹைதராபாத் அணிக்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால், இஷான் கிஷன் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.