பெரிய புரட்யூசர்.. பெரிய பட்ஜெட்!.. யூத் ஹீரோ கென் கருணாஸின் புது பட அப்டேட்!..
கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் இயக்குனராகவும், நடிகராகவும் மாறியிருக்கிறார் கென் கருணாஸ். நகைச்சுவை நடிகர் கருணாஸின் மகன் இவர். சில திரைப்படங்களில் சிறுவனாக நடித்திருக்கிறார். அதன்பின் அசுரன், வாத்தி, விடுதலை 2 ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராகவும் இவர் வேலை செய்திருக்கிறார்..
இந்நிலையிதான், இவர் இயக்கிய நடித்துள்ள யூத் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி நான்கு நாட்களில் ஏற்படும் 28 கோடி வரை வசூல் செய்திருப்பதாக இப்படத்தை தயாரித்த பார்வதா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
பொதுவாக ஒரு இயக்குனர் முதல் படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்கி அது வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த படத்தையும் அவர் இயக்குவார். அப்படித்தான் பார்வதா என்டர்டைமென்ட் நிறுவனமும் திட்டமிட்டிருருந்தது. ஆனால் கலைப்புலி தாணு தற்போது உள்ளே புகுந்து விட்டார்..
அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் என அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி கென் கருணாஸை வைத்து அதிக பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம். இந்த படத்தையும் கென் கருணாஸ் இயக்கி, நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


