மும்பை அணியின் கேப்டனுக்கு ஹர்திக் பாண்டியா தகுதி இல்லை.. சூர்யகுமார் யாதவ்வை போடுங்க: அஸ்வின்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த தற்போதைய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை, மும்பை அணி இன்னும் நிரந்தர கேப்டனாக அறிவிக்காதது கவலையளிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர் என்றாலும், மும்பை அணியில் ரோஹித் சர்மா விவகாரத்தால் அவர் கடும் நெருக்கடியை சந்தித்தார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் இருக்கும்போது, மும்பை அணியில் ஹர்திக் கேப்டனாக இருப்பது ஒரு சவாலான சூழலை உருவாக்கும் என்று அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிப்படையான அழுத்தங்கள் இன்றி, அணி நிர்வாகத்தின் முழு ஆதரவு இருந்தால் மட்டுமே ஹர்திக்கால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் தனது யூடியூப் சேனலில் விவாதித்துள்ளார். மார்ச் 29 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் மும்பை இந்தியன்ஸ் தனது ஐபிஎல் 2026 பயணத்தை தொடங்கவுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.