தி டார்ம்: மீண்டும் ஹீரோவாக நடிக்கும் முனீஸ்காந்த்

மிடில்கிளாஸ் படத்திற்கு பின் மீண்டும் நாயகனாக முனிஸ்காந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் முனீஸ்காந்த். முண்டசுபட்டி பத்தில் நடித்த பிறகே பலருக்கும் இவரை தெரிந்தது. தொடர்ந்து ம்ரகத நாணயம், ராட்சசன் என பல படங்களில் கவனிக்கதக்க வேடத்தில் நடித்தார்.

வழ்க்கமாக கமெடி நடிகர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பார்கள். அந்த வகையில் முனீஸ்காந்தும் மிடில்கிளாஸ் என்ற படம் மூலம் ஹீரோவாக நடித்தார். ஓரளவிற்கு படம் வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் முனீஸ்காந்த். தி டார்ம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் முனீஸ்காந்துடன் காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாம் விஷால் இசையமைக்கிறார். பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோசன் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.